முதல் கணவர் மது அருந்த விடவில்லை! பிரபல நடிகை

#image_title

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நீலம் கோத்தாரி, தனது திருமணம், விவாகரத்து குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். தனது முதல் கணவரை பிரிந்து தற்போது மறுமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். முதல் கணவரை பிரிந்தவர் கடந்த 2011ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சமீர் சோனியை மறுமணம் செய்துகொண்டார்.

இருவரும் இணைந்து கடந்த 2013ம் ஆண்டு அஹான என்ற மகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். நீலம் கோத்தாரி ஒரு பேட்டியில், நான் முதல் திருமணத்திற்கு இங்கிலாந்திற்குச் செல்லவேண்டி இருந்தது, அங்கேயே தங்கினேன்.

முன்னாள் கணவர் என்னை இந்திய உடை அணிய வேண்டும், மாடர்ன் உடை கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது எனக் கூறினார். சொல்வதை எல்லாம் நானும் செய்து வந்தேன், ஒரு கட்டத்தில் எனது பெயரை கூட மாற்ற சொன்னார். ஒருகட்டத்தில் நான் மொத்தமாக மாறியிருப்பதை பார்த்து நானே என்னை கேள்வி கேட்டுக் கொண்டேன், அதனால் தான் விவாகரத்து செய்துவிட்டேன் என கண்ணீருடன் பேசியுள்ளார்.

Exit mobile version