விஜய்யின் “சச்சின்” ரீ-ரிலீஸ்

#image_title

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் ‘சச்சின்’. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். இந்த படத்தில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். அதன்படி கோடை விடுமுறையில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சச்சின் படம் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version