தென்னிந்திய சினிமாவில் நாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. நடன குயின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீலீலா அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தில் பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருந்தார். நடனத்தின் மூலம் இளைஞர்களை கட்டிப்போடும் நடிகை ஸ்ரீலீலா குறித்த ஒரு தகவல் வலம் வருகிறது.
பாலிவுட்டின் டாப் இளம் நாயகன் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலீலா, இப்ராகிம் அலிகானுடன் மும்பையில் காணப்பட்டதால் அவர்கள் பட வேலைகளுக்காக ஒன்றாக சுற்றுகிறார்கள் என்றும் பேசப்பட்டது.
அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. நடிகை ஸ்ரீலீலா நடிப்பில் அடுத்து ராபின்ஹுட், பவன் கல்யாணுடன் உஸ்தாத் பகத் சிங், ரவி தேஜாவுடன் மாஸ் ஜாதரா மற்றும் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.