விஜய் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்

#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் GOAT திரைப்படம் வெளிவந்து வசூலில் வரவேற்பை பெற்றது. விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதன் பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.

முடிவு விஜய் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும் விஜய்யின் இந்த தைரியமான முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு நேற்றைய நாள் மிக முக்கியமான ஒரு நாள் என்றே சொல்லலாம். ஏன்னென்றால் தனது சினிமா வாழ்க்கையில் புகழின் உச்சத்தில் விஜய் ஜொலிக்க இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த விஜய்க்கு முதல் வெற்றி கிடைத்த நாள் நேற்று. சுமார் 29 வருடங்களுக்கு பிறகு பிப்ரவரி 15 ஆம் தேதி தான் விஜய்யின் பூவே உனக்காக திரைப்படம் வெளியானது. விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான இப்படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

Exit mobile version