தமிழ் சினிமாவில் “லவ் டுடே” போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நேர்காணலில் தன் சினிமா பற்றிய பார்வைகளை பகிர்ந்து கொண்டார். நடிகராகவும், இயக்குநராகவும் படத்திலும் புதிய முயற்சிகளை செய்துவரும் பிரதீப் ரங்கநாதன், “எனக்கு படத்தில் கொண்டாட்டங்கள் மிகவும் பிடிக்கும். பல வேஷங்கள் போட்டு நடிக்க வேண்டும் என்றால், அதற்காக ஆர்வம் இருக்காது “என்று கூறினார்.
மேலும் கூறியதாவது, “என்னுடைய படத்தைக் காணும் போது ரசிகர்கள் தியேட்டரில் சந்தோஷமாக கத்துவது, கொண்டாட்டத்தில் ஈடுபடுவது மிகுந்த மகிழ்ச்சியைக் தருகிறது ” என்றார். அவருடைய சினிமா அனுபவம் மற்றும் ரசிகர்களின் மீது உற்சாகம் கொண்டிருப்பதை காணலாம்.
படம் வெற்றிபெற, அது விற்பனையாகும் தரத்திலிருப்பது முக்கியமான அம்சமாக இருப்பதாக பிரதீப் கூறினார். குறிப்பாக “படம் entertaining ஆக இருக்குதோ என்று பார்ப்பேன். விற்க கூடியதாக இருக்குதோ என்பதையும் கவனிப்பேன் “எனத் தெரிவித்தார்.
அனுபமா பரமேஸ்வரன் குறித்தும் சில நெகிழ்ச்சியான கருத்துகளை கூறியுள்ளார். பிரதீப் அதில், “அனுபமாவின் நடிப்பு மற்றும் கதாபாத்திரம் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது “என்றார். நடிகை சினேகா சிறந்த நடிப்புக்காக பலராலும் பாராட்டப்படுபவர். பிரதீப் ரங்கநாதன் தனிப்பட்ட முறையில் அதிகம் ரசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.