விஜய் அரசியலுக்கு வந்தது சிலருக்கு பொறுக்கல…ஷாமின் கருத்து!

#image_title

நடிகர் விஜய் அரசியலில் அறிமுகமாகும் செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது அனைவருக்கும் பிடித்ததாக இல்லை என நடிகர் ஷாம் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜய் அரசியல் பிரவேசம் செய்வதை முன்னிட்டு ரசிகர்களும், பொதுமக்களும் வெவ்வேறு கருத்துகளை பகிர்ந்துவருகிறார்கள். இதுகுறித்து ஷாம் கூறுகையில் , “விஜய் அண்ணா அரசியலுக்கு வருவது சிலருக்கு எப்படியும் பொறுக்காது அது இயல்பு தான் என்றார். ஆனால் அவருடைய வெற்றியும் மக்கள் ஆதரவும் காலம் முடிவு செய்யும்,” என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அவர் முந்தைய காலங்களில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததை நாம் அனைவரும் அறிவோம். இதனை குறித்து ஷாம், “அவர் சொன்ன மாதிரி, ஏன் அரசியல் என்று ஒரு தனிப்பாடம் இருக்க கூடாது? என்றதுடன் ஒரு சமூக மாற்றத்திற்காக அரசியலுக்கு வருவது தவறல்ல ” என்றார்.

விஜய் அரசியலில் இறங்குவதை உறுதியாக அறிவித்த பின், அவருடைய ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் இதில் விஜய் எந்தளவுக்கு ஆழமாக இருக்கிறார் என ஆராய்ந்து வருகின்றனர். ஷாம் இதுகுறித்து கூறுகையில் விஜய் ஒரு திட்டம் வைத்திருப்பார் என்று கூறினார்.

Exit mobile version