பிரபல பாடகி ஷ்ரேயா கோஷலின் சொத்து மதிப்பு

#image_title

ஷ்ரேயா கோஷல், சினிமாவில் கலக்கி வரும் பிரபல பாடகி. 4 வயதாக இருந்தபோது பாடத் தொடங்கியவர் 6 வயதில் இசையில் முறையான பயிற்சி எடுக்கத் தொடங்கினார். பின் 2000ம் ஆண்டு தனது 16 வயதில் சரிகமபா நிகழ்ச்சியில் கலந்துகெண்டு வெற்றியாளரானார்.

கடந்த 2002ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி திரைப்படமான தேவதாஸ் படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் தமிழில் கார்த்திக் ராஜா இசையில் உருவான ஆல்பம் திரைப்படத்திற்காக செல்லமே செல்லம் என்ற பாடலை பாடினார்.

பட்டிதொட்டி எங்கும் கலக்க ஆரம்பித்தவர் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடினார். தமிழில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் 5 தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரியாகவும் உள்ளார்.

பாடகி ஷ்ரேயா கோஷல் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வாழ்த்துக்கள் குவிந்துவரும் நிலையில் ஷ்ரேயாவின் சொத்து மதிப்பு விவரமும் வெளியாகியுள்ளது. ஒரு பாடலுக்கு ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நடிகை ஷ்ரேயா கோஷலின் சொத்து மதிப்பு ரூ. 185 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version