கண்டுபிடிக்கப்பட்டது செயற்கை இதயம்: வைத்தியர்கள் சாதனை

#image_title

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவருக்கு செயற்கை இதயத்தை பொருத்தி அவுஸ்திரேலிய(Australia) வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.

இதயநோயால் பீடிக்கப்பட்ட அந்த நபருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி இதய மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 100 நாட்களின் பின்னர்பெப்ரவரி மாதத்தில் வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிட்னி நகரிலுள்ள புனித வின்சன்ட் வைத்தியசாலையின் இதய மாற்று சத்திரசிகிச்சை நிபுணர் பால் ஜான்ஸ்(Paul Jansz) தலைமையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்றதொரு மைல்கல் சாதனையில் பங்குதாரராக இருந்தமை தாம் செய்த பாக்கியம் என வைத்திய நிபுணர் கூறுகியுள்ளார்.

Exit mobile version