மகிந்த ஆட்சியில் பட்டலந்த புறக்கணித்த ஜே.வி.பி

#image_title

மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்னின்று செயற்பட்ட ஜே.வி.பியினர், பட்டலந்த விவகாரம் மூலமாக தங்களுடைய குற்றங்களை மறைக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், ஏதேனும் குற்றங்கள் தொடர்பில் ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பது வழமையானதொரு செயற்பாடாகும். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மிகப் பழையதாகும். 1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தில் ஜே.வி.பி. அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்தது. 2005 இல் மகிந்த ராஜபகசவை ஜனாதிபதியாக்குவதற்கு இவர்களே பிரதானமாக செயற்பட்டனர்.

காலத்தில் ஏன் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்பது சந்தேகத்துக்குரியது. தேவை ஜே.வி.பி.னரால் செய்யப்பட்ட கொலைகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதாகும். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது” என்றார்.

Exit mobile version