இந்தியா

இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல் மூடப்பட்ட பாடசாலைகள்

இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று ( 8.12.2024) இரவும் இன்று (09.12.2024) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பிரகாரம் இந்திய பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்களை உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபரில், இந்தியாவில் உள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பின்னர் அவை தவறான எச்சரிக்கைகள் என்பது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *