முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலியை கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் 75ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலியை கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.