அநுர ஆட்சியில் வீழ்ச்சி;ஜீவன் எடுத்துள்ள முடிவு!

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க ஒரு தெரிவுக்குழுவை அமைக்கும் முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

குறித்த முன்மொழிவை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி என்பன முன்வைக்க தீர்மானித்துள்ளன.

இது தொடர்பான பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டே, நுவரெலியாவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு  தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Paristamilnews

Exit mobile version