வெளிநாட்டில் நாடுகடத்தப்பட்ட பெண்; மேலும் நாடுகடத்த ஏற்பாடு!

இஸ்ரேலில் இருந்து 17 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேலை ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.

விவசாயத் துறைக்கான வேலை வீசாவில் இஸ்ரேலுக்கு சென்றவர்கள் அந்தப் பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று பேக்கரிகளில் பணிபுரியும் போது உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.இஸ்ரேல்(Israel), வெளிநாட்டு பணியாளர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் நாடு எனவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டுப் பணியாளர்கள் இஸ்ரேலில் பணிக்கு வந்த பின்னர் அவர்களது வீசா வகையை வேறு வீசா வகைக்கு மாற்றுவதற்கான சட்டம் இல்லையென இஸ்ரேல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version