நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கல்வித் தகுதிகளின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரினி அமரசூரியவின் முடிவுக்காக, நாடாளுமன்ற அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் பதவி விலகியமை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நற்சான்றிதழ்களை சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் ஒரு பதவி அல்லது நன்மையைப் பெறுவதற்காக மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, பின்னர் அந்த தவறான சான்றுகளாக நிரூபிக்கப்பட்டால், அது ஒரு தெளிவான மோசடி செயலாகும்.
இந்தச் செயல் ஏமாற்றுதல் மற்றும் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் தண்டனைச் சட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Paristamilnews