அரிசி தட்டுப்பாட்டு பிரச்சனை – அரசாங்கத்தின் தீர்வு!

அரசாங்கத்தின் அரிசி இறக்குமதியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசி எப்பொழுது நாட்டை வந்தடையும் என்பதனை உறுதியாக கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடைவள பிரதி அமைச்சர்  நாமல் கருணாரட்னதெரிவித்துள்ளார்.தனியார்துறையினர் இறக்குமதி செய்த அரிசி தொகைகள் ஓரளவு நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் தலையீட்டைத் தொடர்ந்து அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் சந்தைக்கு தற்பொழுது அரிசி விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Paristamilnews.com

Exit mobile version