இன்று புதிய சபாநாயகர் நியமனம்!

இன்றைய நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்றைய அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, புதிய ஜனநாயக முன்னணி  கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைஸர் முஸ்தபா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

புதிய இணைப்பு

சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உத்தியோகபூர்வமாக  சபையில் அறிவித்துள்ளார்.

 இதனையடுத்து, 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய சபாநாயகராக, ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Exit mobile version