இலங்கை

எரிபொருளுக்கான வரி! ஜனாதிபதியின் அறிவிப்பு

எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அளுத்கம பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்றில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு லீற்றர் டீசலின் விலையை 300 ரூபாவிற்கும் குறைந்த தொகையில் விற்பனை செய்யக் கூடிய நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எல்லா மாதங்களிலும் எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

டீசலுக்கு பாரியளவு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அகற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டுள்ள கடனை அறவீடு செய்யும் நோக்கில் திறைசேரியினால் வரியை அறவீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார். எனவே, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 900 பில்லியன் ரூபா கடன் செலுத்தப்பட்டதன் பின்னரே இந்த வரியை நீக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *