இலங்கை

சட்டத்தை மீறும் இலங்கை இராணுவம்! கஜேந்திரகுமார்

இராணுவமென்றால் சட்டத்தையும் மீறலாம் என்ற நிலை இருக்கமுடியாது என, காட்டுச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போதும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

தையிட்டி திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ள நிலம் தனியாருக்கு சொந்தமான நிலம் என்றும், எந்தவொரு முறையான சட்ட நடைமுறையும் இன்றி, சட்ட விரோதமாகவே விகாரை கட்டப்பட்டது என்றும், இவ்விடயம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டிருந்தேன். நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவரிடம் புதியதொரு விடயத்தைக் கொண்டுவருகின்றேன்.

அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் எழுதிய கடிதம் தொடர்பாக இன்றைய உதயன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்விடயம் தொடர்பான கடிதத்தை இன்று சபையில் சமர்ப்பிக்கிறேன். கடிதத்தில் சந்திரா நிமல் வாக்கிஸ்கா என்பவர் அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் என்று கையொப்பம் இடப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானமுள்ள 6 ஏக்கர் காணியும், உண்மையில் தனியாருக்குச் சொந்தமானதான இருக்கும் நிலையில், சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ள இடம் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இருந்து திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது எனவும், திஸ்ஸ விகாரைக்கு 14 ஏக்கர் காணி இருந்ததெனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனியாருக்குச் சொந்தமான காணிகளையும், அதனுடன் சேர்த்து மேலும் பல ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் செய்து வழங்க வேண்டும் என்றும், தனியாருக்கு சொந்தமான காணிகளை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குழுக்களின் பிரதித் தலைவரே, இராணுவம் ஒரு இனவாத கட்டமைப்பில் செயற்படுகின்றது என்று நான் குறிப்பிடுவது இதனால்தான். மனநிலையையிலிருந்து மாற்றவில்லை. நான் கூறும் கூற்றுக்களில் ஓரளவு உண்மை இருப்பதாக நீங்கள் கருதினால் நீங்கள் சட்டபூர்வ செயல்முறையொன்றுக்கு செல்ல வேண்டும். அந்த அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுகிறார்கள்” என்றார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *