சின்னத்திரையில் களமிறங்கி சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு உதாரணமாக இருப்பவர் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா மூலம் அதிகம் பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். காமெடியன் டிராக்கில் இருந்து இப்போது ஹீரோவாக மட்டும் நடிக்க தொடங்கி அதிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான DD Returns திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை நாம் அறிவோம்.
காமெடியனாக நடிப்பதை நிறுத்திய பிறகு அந்த இடத்தை நிரப்ப இதுவரை யாரும் வரவில்லை. மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்தனர். அவர்களுக்கு ஒரு மாபெரும் ட்ரீட் ஆக அமைந்தது சமீபத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம். இப்படம் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு தற்போது வெளியாகி உள்ளது. இருப்பினும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது.
சந்தானம் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ.15 கோடி வரை சம்பளம் பெரும் சந்தானத்தின் சொத்து மதிப்பு ரூ . 80 முதல் ரூ. 90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.