வெளியேறுமாறு கேட்கப்படும் வரை காத்திருக்காமல் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), தாம் தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் விதிகளை புரிந்து கொண்டால், அவ்வாறு செய்ய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு உரிமையுடையவர்கள் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தச் சட்டத்தை நடைமுறைபடுத்திய அரசாங்கங்களில் இருந்துள்ளார்.
கேட்டுக்கொள்ளும் வரை காத்திருக்காமல் வெளியேறுவது நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் சலுகைகளை ஒழிக்கவும் மற்றும் அரசியல்வாதிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கவும் பொதுமக்கள் அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியுள்ளதால் இந்த விதி அனைவருக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.