திருகோணமலையை சேர்ந்த இளைஞன் , நுவரெலியா பசுமலையில் வசிக்கும் டிக்டொக் காதலியான பாடசாலை மாணவி ஒருவரை காண சென்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி, தந்தையை இழந்தவர் எனவும் தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் சிறிய தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் வீட்டிற்கு வந்த இளைஞனின் நடத்தையால் அயல் வீடுகளில் வாழும் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட, விடயம் தொடர்பில் அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார், இளைஞனை விசாரித்த போது, பேச்சில் தடுமாற்றம் காணப்பட்டுள்ளது. இளைஞனிடம் தேசிய அடையாள அட்டையும் இருக்கவில்லை. , பொலிஸார் இளைஞனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.