சினிமா

23 வயதில் 250 கோடிக்கு சொத்து வைத்திருக்கும் சின்னத்திரை நடிகை

வெள்ளித்திரை நாயகிகளை தாண்டி இப்போது சின்னத்திரை நடிகைகளுக்கு அதிக பாலோவர்ஸ், ரசிகர்கள் கூட்டம் என நிறைய உள்ளது. நடிகைகள் என்ன செய்தாலும் ரசிகர்களிடம் வைரலாகிவிடுவார்கள்.இப்போது ஒரு சின்னத்திரை நடிகை பற்றிய தகவல் தான் ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

23 வயதே ஆகும் இந்த நடிகையின் பெயர் ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி, மும்பையை சேர்ந்த தமன்னா நடித்த Star One’s Medical Romance Dill Mill Gayye என்ற படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அப் நா ரஹே தேரா ககாஸ் கோரா, புல்வா மற்றும் து ஆஷிகியில் பங்க்டி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சின்ன சின்ன ரோலில் நடித்து பிரபலமான இவர் தொலைக்காட்சி துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளதாக கூறப்படுகிறது.

டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒரு எபிசோடுக்கு 18 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நவ்வு செஃப் என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு மட்டும் எபிசோடிக்கு ரூ. 2 லட்சம் வாங்குவதாகவும், சோஷியல் மீடியாவில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. பல வேலைகளை செய்து சம்பாதிக்கும் நடிகை 23 வயதில் ரூ. 250 கோடிக்கு சொந்தக்காரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *