சினிமா

பத்ம பூஷன் விருது வென்றுள்ள அஜித்தின் சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் ரிலீஸ் செய்வதற்கு ரெடியாக உள்ளது. சினிமா மட்டுமின்றி மிகவும் பிடித்த கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார் அஜித். சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். வெற்றியை பாராட்டி சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். சூழல் இவ்வாறு இருக்க அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு.

பத்ம பூஷன் விருது வென்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஒரு படத்தில் நடிக்க ரூ.150 கோடி வரை சம்பளம் பெரும் அஜித் குமாரின் சொத்து மதிப்பு ரூ.350 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இவரிடம் Porsche GT3 RS, Ferrari SF90, BMW 740Li, Mercedes-Benz 350 GLS, Lamborghini போன்ற சொகுசு கார்கள் உள்ளன. இதை தவிர அஜித் சென்னையில் பல கோடி மதிப்பில் பங்களா ஒன்றையும் கட்டி இருக்கிறார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *