உலகம்

மத்திய கிழக்கின் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள்!

சிரியாவின் – ஹெர்மன் மலை உச்சியில், இஸ்ரேலியப் படைகள் காலவரையின்றி தங்கியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார். சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தெற்கு சிரியாவில் மூலோபாய நிலத்தைக் இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றிய நிலையில் காட்ஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அங்குள்ள துருப்புக்களைப் பார்வையிட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். நாட்டுக்கு விரோதமான படைகளை அங்கு நிலை நிறுத்துவதை தடுக்கவே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார்.

சிரியா-லெபனான் எல்லைக்கு மேலே உயர்ந்து நிற்கும் பனி மூடிய மலைச் சிகரங்களின் ஒரு பாரிய எல்லைப்பகுதியான ஹெர்மன் மலை, டமஸ்கஸ் கிராமப்புறங்களையும், 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல் சிரியாவிலிருந்து கைப்பற்றிய இஸ்ரேல் ஆக்கிரமித்த கோலன் ஹைட்ஸையும் கண்காணிக்க உதவுகிறது.

சிரியாவிற்குள் ஐ.நா. கண்காணிப்பில் உள்ள இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் தனது துருப்புக்கள் நிலைகளை எடுத்துள்ளதாகவும், சிலர் அதைத் தாண்டிச் சென்றுள்ளதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலிய எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் தற்காலிகமானவை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *