இலங்கை

எதிர்ப்பார்க்காத கூட்டணியில் ரணில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பலமான அணியொன்று உருவாகும் சாத்தியம் காணப்படுகின்றது. திர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர் சர்வஜன பலய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறியக் கிடைத்துள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *