இலங்கை

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி: சிதறடிக்கப்படும் இலங்கையர்கள்

அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் (U.S) குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்க துறையின் (ICE) தடுப்பு காவலில் இலங்கையர்கள் உட்பட 1,445,549 குடியுரிமை பெறாதவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நடவடிக்கைளின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புகள் இல்லாததால் பெரும்பாலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நாடுகளும் தங்கள் குடிமக்களின் குடியுரிமையை சரிபார்த்து, பயண ஆவணங்களை உடனடியாக வழங்கி, நாடுகடத்தப்படும் விமானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

சில நாடுகள் செயல்முறையை தாமதப்படுத்துவதன் காரணமாக நாடுகடத்தும் செயற்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. நாடுகடத்தப்படவுள்ள மக்களை ஏற்றுக்கொள்வதனை இதுவரை 15 நாடுகள் தாமதமிக்கியுள்ளதுடன், அவற்றின் பட்டியலையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *