இலங்கை

அநுர மீது சஜித் குற்றச்சாட்டு!

அநுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் பணயக் கைதியாக மாறியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றம் சுமத்தியுள்ளார். நாடு அநுரவிற்கு என்ற கொள்கைப் பிரகடனத்தின் மூலம் பெரிய கேக் உருவாக்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாடு, சர்வதேச நாணய நிதியத்திற்கு என்பதே தென்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையையும், தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கொள்கையுடன் ஒப்பீடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். தேர்தல் விஞ்ஞாபன உறுதிமொழிகளில் எவ்வளவு விடயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அரசாங்கம் கூறிய போதிலும், வரவு செலவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பாதையை பின்பற்றிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியிடம் மக்கள் சார்ப்பு கொள்கைகளை காண முடியவில்லை என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி மக்கள் ஆணையை உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் மூன்றாண்டுகளில் சிறு தொகை அளவில் அதிகரிப்பதாகவும் அது இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு போதுமானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *