இலங்கை

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த திட்டம்: கடுமையாக சட்டம்

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டிபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தகவல் ஊடக அமைச்சில் (22.0.2025) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அக்குழுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றுக்கெதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுவதாகவும், அவற்றுக்கு சுமார் 1400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 18 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *