போதகர் ஜெரோம் பெர்னாண்டோ (Jerome Fernando) மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை முழுமையாக நீக்கி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இனக்குழுக்களுக்கு இடையே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பிரசங்கம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட போதகருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க விசாவிற்கு விண்ணப்பிப்பது ஒரு பிரச்சினையாக இருப்பதாகக் கூறி, அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.