இலங்கை

அநுர அரசிடம் மைத்திரி கோரிக்கை

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு குற்றங்களைச் செய்த ஏனைய கும்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) தெரிவித்தார். தனது காலத்தில் வேறு சில கமிஷன்கள் நியமிக்கப்பட்டதாகவும், கமிஷன்களின் அறிக்கைகளையும் செயல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதாகவும் கூறினார்.

மத்திய வங்கி நிதி மோசடி ஆணைக்குழு மற்றும் இலங்கை நிறுவனம் ஆகியவற்றை விசாரிக்கும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை செயல்படுத்துவது நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த ஆணைக்குழு அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதற்கு அப்பாற்பட்ட கடமைகள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *