ஐக்கிய மக்கள் சக்தியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடமான தேசியப் பட்டியல் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஷாம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இஸ்மாயில் மொஹமட் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 05 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதில் ஒரு ஆசனம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் உள்ளடக்கப்படாமல், அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில், நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்கி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஆசனங்களுக்கான பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Paristamilnews