இலங்கைவிபத்து

வீதியில் நிறுத்தி இருந்த வாகனத்தின் மீது மோதி இளைஞன் பலி!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (21) மாலை இடம்பெற்றது.

இந்த விபத்தில் மாமாங்கம் பாடசாலை வீதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளாவது,

கூழாவடி, மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் உள்ள ஒப்பந்தக்காரர் ஒருவர் அவரது கனரக வாகனங்களை வீதியில் நிறுத்திவைத்திருந்துள்ளார்.

மட்டக்களப்பில் மழை பெய்துவருகிற காரணத்தால் இந்த கனரக வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பகுதி இருளாக காணப்பட்டது.

இந்நிலையில், அந்த வீதியூடாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.

அவ்வீதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

Paristamilnews.com

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *