அரசியல்இலங்கை

தனது சத்திர சிகிச்சைக்காக நிதி பெற்றுக்கொண்டது ஒரு குற்றமா?- மனமுடைந்து பேசிய முன்னால் அமைச்சர்!

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து தன்னால் 30 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக தன்னால் குறித்த நிதி பெற்றுக்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அது பாரிய குற்றமாக இருந்தால் தன்னை தூக்கிலிடுமாறும்  சகமால அரசாங்கத்திடம் அவர்  கோரிக்கை விடுத்தார்.

மேலும், அந்த 30 லட்சமும் எனது வங்கிக் கணக்கிலோ அல்லது எனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிலோ வரவு வைக்கப்படவில்லை.

எனது சிறுநீரக சத்திர சிகிச்சையை செய்த வத்தளை தனியார் வைத்தியசாலைக்கு செலுத்தப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, ​​மருத்துவமனை கட்டணம் மட்டும் ஒரு கோடிக்கு மேல் செலவானது. தனது காரை விற்பனை செய்து அதன்மூலம் பணம் செலுத்தியாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் வாங்கிய நிதிக்காக எல்லோரும் கூச்சல் போடுகிறார்கள். ஆனால் நான் தலையிட்டு எத்தனை நோயாளர்களுக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் பெற்றுக்கொடுத்துள்ளேன் தெரியுமா? என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  • paristamilnews.com

 

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *