திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த ஆளில்லா விமானமொன்று சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்தொழிலாளர்கள் சிலர் நேற்றிரவு கடலுக்குச் சென்றிருந்த நிலையில், கடலில் மிதந்து கொண்டிருந்த ட்ரோன் ரக விமானம் ஒன்றைக் கண்டுள்ளனர்.
அதனையடுத்து குறித்த ட்ரோன் விமானத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனசம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ட்ரோன் ரக விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ளனர்.