உனவடுன சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் சேஷ்டைசெய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அதே விடுதியில் தங்கியிருந்த நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் தங்கியிருந்த அறைக்கு அருகில் ஆண் ஒருவர் பாலியல் சேஷ்டையை தன்னிடம் வெளிப்படுத்தியதாக குறித்த ரஷ்ய பெண் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாஇதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (28) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
paristamilnews.com