இந்தியா

23 வயது இளைஞர்! 700 பெண்களை ஏமாற்றி சிக்கிய பின்னணி

உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வந்த இளைஞர் 700 பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டார்.
டெல்லியைச் சேர்ந்த 23 வயது துஷார் சிங் பிஷ்ட். இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், துஷார் சிங் தன்னை ஏமாற்றிவிட்டதாக சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் துஷார் சிங்கின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து பொலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

துஷார் சிங் இதுவரை 700 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

டேட்டிங் செயலி ஒன்றில் துஷார் சிங் தன்னை அமெரிக்க மொடல் என்று கூறிக்கொண்டு ஒன்லைன் வழியாக பல பெண்களிடம் அறிமுகமாகியுள்ளார்.
18 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களுடன் பழகிய அவர், தனக்கு திருமணம் வரன் தேடி இந்தியா வந்ததாக கூறியுள்ளார்.

அவர் கூறியதை நம்பி பழகிய பெண்கள் தங்களது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை துஷார் சிங் கேட்டதற்காக அனுப்பியுள்ளனர்.
அதன் பின்னர் அவரை வைத்து அப்பெண்களை மிரட்டிய துஷார் சிங், பல பெண்களிடம் பணம் பறித்துள்ளார்.
மோசடிக்காக அவர் பயன்படுத்திய செல்போன், 13 கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *