சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் இது20 ஆண்டுகளாக இருந்து வரும் வைரஸ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் கடந்த ஆண்டு ஜனவரி மாதங்களில் இலங்கையிலும் HMPV தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதுடன், HMPV வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இவ்வருடம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் கண்டியில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
“ஊடகங்களில் தேவையற்ற அச்சமும் பீதியும் எழுந்துள்ளது. சீனா மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஒரு புதிய வைரஸ் வந்துள்ளது. கோவிட் 19 தொற்றுநோய் நிலைமைக்கு மீண்டும் செல்ல நேரிடும் என செய்திகள் பரவி வருகின்றது.
எனினும் இந்த வைரஸ் 20 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளது, இது எங்கள் சோதனைகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது உண்மையில் இந்த வைரஸ் சுவாச அமைப்பு தொடர்பான வைரஸ்கள் பெரும்பாலும் குளிர்காலத்தில் வரும். இந்த வைரஸ் அவ்வப்போது வெளிப்படுகிறது. எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை .