பிரித்தானியாவும் உக்ரைனும் 100 ஆண்டுகள் கூட்டாளர் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன.அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது. ரஷ்ய உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பா உக்ரைனுக்கு ஆதரவைக் காட்டும் வகையில் பிரித்தானியா உக்ரைனுடன் 100 ஆண்டுகள் கூட்டாளர் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov தெரிவித்துள்ளார். உக்ரைன் பிரித்தானிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரித்தானியா உக்ரைனில் ராணுவ தளங்களை அமைக்கலாம் என்பது தொடர்பில் கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov இடம் கேள்வி எழுப்பப்பட்டது. பதிலளித்த Peskov, பிரித்தானியா ஒரு நேட்டோ நாடு என்பதால், எங்கள் நாட்டின் எல்லைக்கு அருகே அது ராணுவ தளத்தை அமைப்பது உண்மையாகவே கவலையை ஏற்படுத்தும் விடயம்தான். எப்படியானாலும், என்ன நடக்கும் என்பது குறித்து ஆராயவேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் Peskov.
பிரித்தானியாவின் நடவடிக்கை புடினுக்கு எரிச்சலூட்டியுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. அதற்கு பதிலடி கொடுக்க புடின் அடுத்து என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.