அமெரிக்காவில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்கள்

#image_title

இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் அமெரிக்காவில் துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் சுமார் 50,00,000 பேர் வசிக்கின்றனர். அமெரிக்க மக்கள் தொகையில் 1.5 சதவீதம் ஆகும்.

ஆனாலும் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பை இந்தியர்கள் வழங்குவதாக பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியர்களின் ஆதிக்கம் குறித்து ஆய்வில், அமெரிக்காவின் முன்னணி 500 நிறுவனங்களில் 16 நிறுவனங்களை நடத்துவது இந்தியர்கள்தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் 27 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியவை. அமெரிக்காவின் 648 புத்தாக்க நிறுவனங்களில் 72 நிறுவனங்களை நிறுவியவர்கள் இந்தியர்கள். அமெரிக்க விடுதிகளில் 60 சதவீதத்தை வைத்திருக்கும் இந்தியர்கள், அமெரிக்க அரசிற்கு வருமான வரியை 5 முதல் 6 சதவீதம் வரை செலுத்துகின்றனர்.

தொழில்துறையைப் பொறுத்தவரை ஆல்ஃபாபெட் தலைமை அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்டின் தலைமை அதிகாரியாக சத்யா நாதள்ளா உள்ளனர்.

Exit mobile version