மூன்று மாத காலத்தில், இலங்கை வரலாற்றில் வெளிநாட்டு முதலீட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தெரிவித்துளள்ளார். அரசாங்கத்தில் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சீனாவின் 3பில்லியன் முதலீடு பெரிய சாதனை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முந்தைய அரசாங்கத்திற்கு தூய்மையான ஆணையை வழங்காததால் இந்த வகையான முதலீடு வரவில்லை என்றும் இந்திக கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு தூய்மையான மக்கள் ஆணையைப் பெற்றதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தூண்டப்படுகிறார்கள் என தெரிவித்த அவர், அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு, நாட்டின் பொருளாதார குறிகாட்டிகளும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான சூழ்நிலை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.