சுற்றுலா பயணிகள் பயணிக்க சிறந்த நாடுகளில் இலங்கைக்கு அங்கீகாரம்

#image_title

2025ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் முதல் 10 இடங்களுக்குள் இலங்கையானது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பிபிசி டிராவல் (BBC Travel) இன் உலகின் தலைசிறந்த பயண இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியில் இலங்கை 9வது இடத்தில் உள்ளது.

சுற்றுலா வழிகாட்டியில் இலங்கையில் உள்ள மூடுபனி, மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள், சுற்றித் திரியும் காட்டு யானைகள், பழங்கால கோவில்கள் மற்றும் அலைச்சறுக்கு ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாக விவரிக்கப்பட்டுள்ளது, பார்வையாளர்களுக்கு நம்பமுடியாத பயண அனுபவங்களையும் வழங்குகிறது.

கண்டியில் முதலாவது ஏழு நட்சத்திர ஹோட்டலை நிர்மாணித்தல், கொழும்பில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விடுதி நிர்மாணம் மற்றும் இலங்கையை தூர கிழக்குடன் இணைக்கும் புதிய விமான சேவையை ஆரம்பித்தல் உட்பட இலங்கையின் பல அபிவிருத்திகளை வழிகாட்டி முன்னிலைப்படுத்தியுள்ளது.

Exit mobile version