வெளியான பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குரல் பதிவு

#image_title

பங்களாதேஸில்(Bangladesh) கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தினால் தான் நாடு இல்லாமல் வீடு இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் பிரதமர் ஹசீனா(Sheikh Hasina) குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது. குரல் பதிவானது அவரின் முகப்புத்தக பக்கத்தில் வெளியாகியுள்ளது.

பங்களாதேசத்தில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் போராட்டம் வன்முறை ஏற்பட்டது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் கட்டுப்பாட்டை மீறி சென்ற நிலையில் அவர் பதவி விலக மறுத்தார். தொடர்ந்து, நடந்த போராட்டத்தில் 600 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.

இதனால் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொது வெளியில் வராமல் இருக்கும் ஷேக் ஹசீனா குரல் பதிவு வெளியிட்டுள்ளார்.

பங்களா மொழியில் அவர் வெளியிட்டு இருக்கும் அந்த குரல் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது,

“வீடு, நாடு இல்லாமல் தவிக்கிறேன் வெறும் 20-25 நிமிடங்களில் நாங்கள் மரணத்தில் இருந்து தப்பினோம்.

ஒகஸ்ட் 21ஆம் திகதி கொலையில் இருந்து தப்பியதாக நான் உணர்கிறேன். அல்லாவின் கருணை இல்லை என்றால் இந்த முறை நான் தப்பித்து இருக்க மாட்டேன். கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி, முதல் முறையாக நடந்தது இல்லை. எனது வாழ்க்கையில் என்னைக் கொல்வதற்கு பல முறை சதி நடந்திருக்கிறது.

எனக்கு எதிராக உள்ளவர்கள் என்னை கொலை செய்ய எப்படி எல்லாம் திட்டமிட்டு இருந்தார்கள் என்பதை உலகம் அறியும். வீடு, நாடு இல்லாமல் நான் தவிக்கிறேன். அனைத்தும் தீக்கிரையாக்கபட்டது” என அழுதபடி கூறும் வகையில் குரல் பதிவு உள்ளது.

Exit mobile version