2024ஆம் ஆண்டில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 77 அரசாங்க ஊழியர்கள் இலஞ்சம் ஊழல், மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அரச ஊழியர்களில் ஆகக்கூடுதலானவர்கள் பொலிஸார் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு 22 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஊழியர்கள் ஆறு பேரும் இந்தக் காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். அடுத்ததாக நீதிமன்ற ஊழியர்கள் ஐந்து பேர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீ்ழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராம அலுவலர்கள் மூன்று பேர், பாடசாலை அதிபர்கள் மூன்று பேர் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் 77 அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.