இராணுவத்தின் உதவியுடன் புதிய வேலைத்திட்டம்

#image_title

நாடு முழுவதும் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய, களஞ்சியசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. வேலைத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த களஞ்சியசாலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் உள்ள 209 நெல் களஞ்சியசாலைகள் சுத்தப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version