ஒரே கணக்கில் தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் சம்பளம்

#image_title

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினரான நிஹால் கலப்பதி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கட்சியால் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நடைமுறையை ஜனாதிபதியும் பின்பற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிதிகள் கொழும்பு பொரல்லையில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டு பொது சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Exit mobile version