உலகம்

ட்ரம்பின் மனைவியை நாடுகடத்துவாரா?

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப். அவரது மனைவியான மெலானியாவே ஒருவகையில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்தான்.

அப்படியானால், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் மொத்தமாக நாடுகடத்தப்போவதாகக் கூறும் ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்பை நாடுகடத்துவாரா? மெலானியா, மத்திய ஐரோப்பாவிலுள்ள ஸ்லோவேனியா நாட்டில் பிறந்தவர். 1996ஆம் ஆண்டு புலம்பெயர்தல் விதியை மெலானியா மீறியதற்கு ஆதாரமான ஆவணங்கள் The Associated Press என்னும் ஊடகத்துக்கு கிடைத்துள்ளன.

மெலானியா சட்டப்படி வெறும் ஆறு மாதங்கள் அமெரிக்காவில் தங்கும் வகையில், சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்குள் வந்தும், சட்டத்துக்கு விரோதமாக மொடலாக பணி செய்யத் துவங்கியுள்ளார். எப்படி கிரீன் கார்டு பெற்றார், புலம்பெயர்தல் நிலை என்ன என்பதெல்லாம் இதுவரை ரகசியமாகவே நீடிக்கிறது.

அப்படியானால், விசா மோசடி செய்த மெலானியாவின் குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும். ஆக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் மொத்தமாக நாடுகடத்தப்போவதாகக் கூறும் ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்பை நாடுகடத்துவாரா என கேள்வி எழுப்பியுள்ளன ஊடகங்கள்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *