இலங்கை

வாகனங்களின் விலை குறித்து ஜனாதிபதி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை தற்போதைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என்று அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல் மற்றும் நிதி நிறுவனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என கூறியுள்ளார். பயன்படுத்தப்பட்ட வாகன விலைகளின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, வங்கிகள் குத்தகை நிறுவனங்களில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

“அந்நிய செலாவணி இருப்புக்களை திறம்பட நிர்வகிக்க, 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு 1.2 பில்லியன் டொலர்களை ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை 2018ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1.9 பில்லியன் டொலர்களையும் 2019இல் 1.4 பில்லியன் டொலர்களையும் செலவிட்டது. மற்றொரு பொருளாதார நெருக்கடியைத் தூண்டக்கூடிய வெளிநாட்டு இருப்புக்கள் குறைவதைத் தடுக்க வாகன இறக்குமதிக்கான வரம்புகளைப் பராமரிப்பது முக்கியமானது.

ஒழுங்குபடுத்தப்படாத இறக்குமதிகள் நமது வெளிநாட்டு டொலர் இருப்புக்களை முழுவதுமாகக் குறைக்கக்கூடும். எதிர்வரும் பெப்ரவரி மாதம், அரசாங்கம் வாகன இறக்குமதியை மீண்டும் அனுமதிக்க உள்ளது, ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட இறக்குமதி காரணமாக  பயன்படுத்தப்பட்ட மாற்று வாகனங்களுடன் ஒப்பிடும்போது புதிய வாகனங்களுக்கான விலைகள் அதிகரிக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *