சினிமா

தமன்னா ஆன்ட்டி-யா..! நடிகையால் அதிர்ச்சி

தமன்னா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நடிப்பில் Odela 2 திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து மனதை கவர்ந்தார். கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பயணித்து வரும் தமன்னா, படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய நடனம் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் துவங்கி ஸ்ட்ரீ 2 படம் வரை நடனத்திற்கு வரவேற்பு உள்ளது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னாவின்  வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

நடிகை ரவீனா டாண்டனின் மகளும், 19 வயதான இளம் நடிகையுமான ராஷா ததானி தமன்னாவை ஆன்ட்டி என அழைக்க, பட்டென அவர் ராஷா ததானி தோள் மீது லேசான அடிபோட்டு ஆன்ட்டின்னுலாம் சொல்லக் கூடாது, என செல்லமாக கண்டித்துள்ளார் தமன்னா. வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *