மகிந்தவுக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் முன்னெடுப்பு

#image_title

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் இடம்பெற்று வருகிறது என சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர்,

“சிங்கங்கள் ஒருபோதும் நாய்க்குட்டிகளைப் போல புலம்புவதில்லை. ஹம்பாந்தோட்டை கெப்பிதிகொல்லேவவில் பல குழந்தைகளின் உயிர்களை காவுகொண்ட பேருந்து குண்டுவெடிப்பை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி கண்ணீர் விட்டார். அந்த துயர தருணமே நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரை வெற்றிகொள்ள வழிவகுத்தது.

மகிந்த ராஜபக்ச தனது வீட்டை இழந்ததற்காகவோ அல்லது தனது பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டதற்காகவோ அழுபவர் அல்ல. கொழும்பில் உள்ள விஜேராமாவில் 4.6 மில்லியன் ரூபாய்களை செலவழித்து வாழ வேண்டிய ஒருவர் அல்ல. தேவைப்பட்டால், அவர் கொழும்பில் உள்ள சங்க்ரி-லா ஹோட்டலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கலாம். போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவருக்கு சேறு பூசுவதனை நிறுத்திக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

Exit mobile version