வார தொடக்கத்தில் பிரித்தானியாவின் கடல் பகுதியில் ரஷ்ய உளவு கப்பல் காணப்பட்டதை அடுத்து, ராயல் கடற்படை கண்காணித்து வருகிறது என பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார். ஜான் ஹீலி கூறுகையில், யந்தர் என்ற அந்தக் கப்பல், உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதற்கும், பிரித்தானியாவின் நீருக்கடியில் உள்கட்டமைப்பை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் வளர்ந்து வரும் ரஷ்ய அத்துமீறலுக்கு எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ளார். ஜான் ஹீலி மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் உங்களைப் பார்த்துவிட்டோம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், இந்த நாட்டைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்பதை ஜனாதிபதி புடின் தெரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா யந்தரை ஒரு கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் என்றும், இது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தால் இயக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் ஐரோப்பிய கடல் பகுதியில் இயங்கும் கப்பலைக் கண்காணித்து வருகின்றன, கடலுக்கடியில் உள்ள கேபிள்களை உளவு பார்ப்பது பணியின் பகுதியாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யா இந்த நடவடிக்கையை முடுக்கிவிட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ராயல் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று யந்தருக்கு அருகில் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே ஹீலி தெரிவித்துள்ளார். ரஷ்ய கடற்படை நடவடிக்கைகளுக்கு நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் தனது பதிலை வலுப்படுத்தி வருவதாக ஹீலி தெரிவித்துள்ளார்.